இலங்கையில் வருடாந்தம் இடம்பெறும் விபத்துகளில் 75 சதவீதமான வாகன விபத்துகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துபவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி பகல் 12.00 மணியிலிருந்து நேற்று (திங்கட்கிழமை)காலை 6.00 மணிவரையான 18 மணி நேர காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக 905 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த காலப்பகுதிக்குள் வெவ்வேறு போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில், 6,898 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகமாக வீதி சட்டங்களை மீறியமை தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.