File Photo
மியன்மாரில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் இவர்கள் மியன்மார் கடல் எல்லையில் வைத்து அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது அந்த மீனவர்கள் அதிகாரிகளினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மியன்மாரிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் மியன்மாரில் இராணுவ ஆட்சி உருவானதை தொடர்ந்து மீனவர் விவகாரம் தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.