January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவனுக்கு கொரோனா!

கொழும்பிலுள்ள ‘ஐசிபிடி கெம்பஸ்’ கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மாணவன் இறுதியாக கடந்த 4ஆம் திகதி கெம்பஸ் வளாகத்திற்குள் வந்திருந்ததாகவும் இதனால் அந்த தினத்தில் அங்கு வந்த மாணவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது அந்த மாணவன் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவனுடன் தொடர்புகளை பேணியவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மினுவாங்கொட பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட ஆடைத் தொழிற்சாலைக்கு வெளியே வேறு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.