
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் பார்வையிட்டுள்ளார்.
இன்று மாலை அக்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அங்கு ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்டு அவரிடம் நலன் விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றத்தினால் கடந்த ஜனவரி 12 ஆம் திகதி நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் அக்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதேவேளை கடந்த வாரம் அவரின் பாராளுமன்ற ஆசனம் இரத்துச் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.