January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பண்டிகை காலத்தில் சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கொண்டு வருவது அதிகரிப்பு’: சிறைச்சாலைகள் திணைக்களம்!

பண்டிகை காலங்களில் சிறைச்சாலைகளுக்கு சட்டவிரோத போதைப்பொருட்கள் எடுத்துச் செல்வது அதிகரித்து உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை கொண்டு வரும் வெளிநபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.

மெகசின் சிறைச்சாலை, களுத்துறை சிறைச்சாலை, வெலிக்கடை மகளிர் பிரிவு, சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் பிற தடுப்பு மையங்களில் நடத்தப்பட்ட தேடல் நடவடிக்கைகளின் போது, ஏராளமான போதைப்பொருள் மற்றும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.