புத்தாண்டு தினமான புதன்கிழமை(14) விபத்துகள்,மற்றும் மோதல்கள் காரணமாக காயமடைந்த 165 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வைத்தியசாலையின் தலைமை தாதி பயிற்றுவிப்பாளர் புஷ்பா ராமியானி டி சொய்சா,இது கடந்த ஆண்டை விட 47 வீதம் உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;,
சாலைகள் மற்றும் பிற இடங்களில் விழுந்ததாக கூறி 49 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, புத்தாண்டு தினத்தில் சாலை விபத்துக்களை சந்தித்த 40 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டைகள் காரணமாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை,19 பேர் உடல்ரீதியான தாக்குதல் தொடர்பாக காயமடைந்துள்ளனர்.மேலும் மூன்று சம்பவங்கள் பட்டாசு மூலம் ஏற்பட்ட தீக்காயங்களுடன் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு புத்தாண்டு தினமன்று 85 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.