புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீள கொழும்பு திரும்புவதற்காக நாளை (வியாழக்கிழமை) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணாஹங்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மேலதிகமாக 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தூர பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பிற்கு பிரவேசிக்கவுள்ள பொதுமக்களின் நலன் கருதி நாளை (வியாழக்கிழமை)முதல் தூர இடங்களில் இருந்து தலைநகருக்கான ரயில் சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.