சப்புகஸ்கந்த – ரத்கஹவத்த பிரதேசத்தில் சுமார் 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
91 பக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் குறித்த ஐஸ் போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜா-எல, நிவந்தம பிரதேசத்தில் 13 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
ஹெரோயின் தொடர்பில் சுற்றிவளைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஐஸ் போன்ற போதைப்பொருட்களை இந்நாட்டிற்கு கொண்டு வருவது அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்