January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏப்ரல் 12 பொது விடுமுறை தினம் வங்கி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொருந்தாது

இலங்கையில் நாளைய தினத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை, வங்கி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொருந்தாது என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 12 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக குறிப்பிட்டு 10 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் விசேட அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.

10, 11 ஆம் திகதிகள் வர இறுதி நாட்கள் என்பதனாலும், 13, 14 ஆம் திகதிகளில் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலம் என்பதனாலும் அந்த தினங்களுக்கு இடைப்பட்ட 12 ஆம் திகதியையும் பொது விடுமுறை தினமாக அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது.

இந்த விடுமுறை தொடர்பாக தெளிவுப்படுத்தி இன்று காலை விசேட அறிக்கையொன்றை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி அரச ஊழியர்களுக்கு மாத்திரமே 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை பொருந்தும் எனவும், அரச மற்றும் தனியார் வங்கிகள் வழமைப் போன்று இந்த தினத்தில் இயங்கும் என்பதுடன், வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.