கொவிட்- 19 தடுப்பூசி ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு இந்தியா எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இரண்டாம் சுற்று தடுப்பூசி விநியோகத்துக்கான தடைகள் குறித்து ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளுக்குப் பதிலளிக்கும் போதே, இந்திய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவில் இந்தியா தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளதாகவும் இந்திய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவொரு நாடும் இந்தியாவைப் போன்று பெரிய தொகை தடுப்பூசிகளை இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மைத்திரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 1.25 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.