கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.
தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் வவுனியா நகரப்பகுதியில் உள்ள கம்பன் உருவச்சிலைக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளரான பார்த்தீபனால் சிறப்புரையும் ஆற்றப்பட்டது.
நிகழ்வில் செட்டிக்குளம் பிரதேச சபை தவிசாளர் ஜெகதீஸ்வரன், நகரசபை உறுப்பினர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.