July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு பணப் பரிசு’: பொலிஸார் அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 1997 எனும் இலக்கத்திற்கு தகவல் தருவோருக்கு பணப் பரிசு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பிலான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நேற்று 100 இற்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் பேலியகொட, பட்டிய சந்தி பகுதியில் வைத்து 142 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க முடியும் என்றும் உறுதி செய்யப்பட்ட தகவல்களை 1997 எனும் இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ‘நீங்கள் வழங்கும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டால், இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் உங்களுக்கு பெறுமதிமிக்க சன்மானம் வழங்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.