January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிந்தவூர் அட்டப்பள்ளம் இந்து மயான விவகாரம்: பிக்குகள் குழு பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் அட்டப்பள்ளம் இந்து மயானம் பிரச்சனை தொடர்பாக ஆராயவென பெளத்த பிக்குகள் குழுவொன்று பிரதேசத்திற்கு சென்றுள்ளது.

நபரொருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த மயானத்தை மீட்டுத்தருமாறு மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய பிக்குகள் குழுவொன்று அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளது.

பாதுகாப்புடன் அங்கு சென்ற அவர்கள் மக்களுடன்  கலந்து ஆலோசனை மேற்கொண்டிருந்தனர்.

பிரதேச மக்களுக்கு மீண்டும் குறித்த மயான நிலத்தை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிப்பதாக பிக்குகள் தெரிவித்துள்ளனர்.