ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
யுத்தத்தில் அதிகமாக வடக்கு, கிழக்கு மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ஒருமித்த இலங்கைக்குள் நீதி நிலைநாட்டப்படவேண்டும். அதன்மூலமே தேசியப் பாதுகாப்பையும், இறையாண்மையையும் உறுதிப்படுத்த முடியும் என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை சில தரப்பினர் வாக்குகளுக்காக மக்கள் மத்தியில் இனவாதத்தை புகுத்துகின்றனர் எனவும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இனவாதத்தின் பக்கம் போகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.