இலங்கை சிறைச்சாலைகளுக்குள் போதைப் பொருட்கள் பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் கைதிகள் அடங்கிய சிறப்புக்குழுவை நியமிப்பதற்கு சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
நாட்டிலும் சிறைச்சாலைகளுக்குள்ளும் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய ஒவ்வொரு சிறைச்சாலைகளுக்கும் கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த முயற்சியானது போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கைதிகளின் போதைப்பொருள் பாவனையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.