January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இரணை தீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இரணை தீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒழுங்கு விதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

நேற்று மாலை கூடிய நிபுணர்கள் குழு கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளாதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரணை தீவில் உடல்களை அடக்கம் செய்யும் போது, முழுமையாக சுகாதார ஒழுங்கு விதிகள் கடைபிடிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.