January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா அமர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கலந்துரையாடல்

தமிழ்த் தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்க்கட்சிகள், வடக்கு-கிழக்கில் உள்ள மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோரின் ஒன்றிணைந்த கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் தேவாலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜெனிவா அமர்வு தொடர்பாகவும், தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எம். எ.சுமந்திரன், ஈபிஆர்எல்எப் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்தோடு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கருணாகரம்,சிறிதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வேலன்சுவாமிகள மற்றும் மதத்தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அனந்தி சசிதரன், சிறிகாந்தா, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சிகளைச் சேர்ந்த எவரும் சமூகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.