
இலங்கை இருபது 20 கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானகவின் கடவுச்சீட்டு தொலைந்ததால் மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி நேற்று மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தது.
இந்நிலையில், பயணத்துக்கான இறுதி ஆயத்தங்களின் போது, தசுன் ஷானகவின் கடவுச்சீட்டு தொலைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப் பயணத்தின் போதே, இலங்கை இருபது 20 கிரிக்கெட் அணியின் தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சிக்கலைத் தீர்த்துக்கொண்டு, அவர் உடனடியாக மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.