May 14, 2025 0:35:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா தொற்று

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணி நாளைய தினத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து லகிரு குமாரவுக்கு பதிலாக சுரங்க லக்மால் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள லகிரு குமாரவுடன் தொடர்புகளை பேணிய மற்றைய வீரர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுகள் இன்று இரவுக்குள் வெளியாகவுள்ளன.

இதற்கு முன்னர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய இலங்கை அணியின் லகிரு திரிமான்னே தற்போது பூரண குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.