May 31, 2025 10:57:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரிடமும் பொலிஸார் வாக்குமூலம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோரிடம் கிளிநொச்சிப் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்ற தடையை மீறி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இருவரும் பங்கேற்றனர் எனக் கூறியே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரிடம் நீதிமன்றத் தடையை மீறி பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.