May 13, 2025 11:39:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கத்தில் தொடர்ந்து நிலைக்க முடியுமா என்பதை உறுதியாக கூற முடியாது’ – விமல் வீரவன்ச

தாம் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டு வெளியேற போவதில்லை, ஆனால் அரசாங்கம் தம்மை நீக்கி விடுமா என்பதை உறுதியாக கூற முடியாது என  அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற அவரின் கருத்து, கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து அரசாங்கத்துடன் இருப்பீர்கலா? என கேட்கப்பட்ட போது, குழப்பம் அடைந்து முடிவுகளுக்கு வரக்கூடாது என்று கூறிய விமல் வீரவன்ச, தற்போதைய அரசாங்கம் ஆரோக்கியமான முறையில் முன்னோக்கிச் செல்லும் என தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பட்டுள்ள முரண் பாடுகள் தொடர்பில் கேட்கப்பட்ட போது, நான் நாடாளுமன்ற உறுப்பினர் மீது குறை கூற மாட்டேன் அவர்களுக்கு எவராவது அந்த பொறுப்பை வழங்கி இருக்கலாம் என்றார்.

தேசிய வளங்கள் விற்பனை செய்வதற்கு எதிராக தாம் செயற்பட்டமை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர் இருப்பினும் தாம் அரசியலுக்கு பிரவேசித்தது முதல் தேசிய வளங்கள் குறித்து அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.