November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடரும்’: இலங்கை மத்திய வங்கி

file photo: Twitter/ CBSL

வாகனங்கள் உட்பட அத்தியாவசியமற்ற, ஆடம்பர பொருட்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் டபில்யு.டி. லக்ஷ்மன் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே, இதனைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி விடயங்களில் உள்ள கட்டணம் செலுத்துதல் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் உள்நாட்டு தொழில்துறை முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தெளிவான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து எதிர்மறையான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அரசாங்கத்தின் சரியான நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு 5.5 அல்லது 6 வீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.