File Photo: Twittet/ Srilanka red cross
இலங்கையில் இன்றைய தினத்தில் 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை
71,211 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இன்றைய தினமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வாரங்களில் 800 முதல் 850 வரையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் பின்னர் அந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் நாளாந்த தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
912 பேர் குணமடைந்தனர்
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 912 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 65,053 பேர் குணமடைந்துள்ளதுடன், 5788 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5 பேர் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 370 ஆக உயர்வடைந்துள்ளது.