இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் தொடரும் நிலையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எந்தவொரு நிகழ்வை நடத்துவதாக இருந்தாலும் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் பின்பற்றப்பட வேண்டுமெனவும், இதன்படி 14 ஆம் திகதி இந்த ஒழுங்குவிதிகளை மீறி காதலர் தின நிகழ்வுகள் நடத்தப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களூடாக இவ்வாறான கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்வது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அது தொடர்பாக பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இவ்வாறான விடயங்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் விழா மண்டபங்களை வழங்குகின்றவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.