October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொடர்பான உண்மைத் தகவல்களை அரசாங்கம் மூடி மறைக்கின்றதா? : எதிர்க்கட்சி கேள்வி

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை அரசாங்கம் மூடி மறைக்கின்றதா? என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேள்வியெழுப்பியுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரின் நாளாந்த எண்ணிக்கை 11 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டுமெனவும், ஆனால் நாளாந்த புள்ளி விபர தகவல்களில் அந்த எண்ணிக்கை ஐந்தாயிரத்திற்குள்ளேயே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே ஹேஷா விதானகே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

நாளாந்தம் 800 பேர் வரையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில், அவர்கள் குறைந்தது 14 நாட்களாகவது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற வேண்டும். இதன்படி நாட்டில் தற்போது சிகிச்சைப் பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் அந்த எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதன் நோக்கம் என்ன? மூன்று நாட்களில் நோயாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதா? அல்லது பொய்யான புள்ளவிபர தகவல்கள் மூலம் மக்களை ஏமாற்றுகின்றதா? என்ற கேள்விகள் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோ பிள்ளே அரசாங்கம் இந்த விடயத்தில் எந்த தகவல்களையும் மூடி மறைக்கவில்லையெனவும், 10 நாட்களில் குணமடைந்து வீடு திரும்பும் நோயாளர்களும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.