
இலங்கையில் இன்றைய தினத்தில் 868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை
70,216 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 740 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 64,141 பேர் குணமடைந்துள்ளதுடன், 5710 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 பேர் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 365 ஆக உயர்வடைந்துள்ளது.
யாழில் முதல் மரணம் பதிவு
கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீவகம் வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது யாழ்ப்பாணத்தில் பதிவான முதல் மரணம் என்பதுடன், வடக்கில் பதிவான நான்காவது மரணமாகும்.