
நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா எடின்புரோ தோட்டத்திற்கு மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
இந்தக் கஞ்சா சேனையில் 3 மற்றும் 5 அடி உயரமான 272 கஞ்சா செடிகள் இருந்ததாகவும், சுற்றிவளைப்பின் போது கஞ்சா செய்கையில் ஈடுபட்ட நபர் தப்பியோடிவிட்டார் எனவும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நுவரெலியா நீதிமன்றத்தில் கட்டுவதற்காக 3 கஞ்சா செடிகளை மட்டும் வைத்துவிட்டு ஏனைய கஞ்சா செடிகளை தீயிட்டு அழிப்பதற்கு அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், இதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னர் நுவரெலியாவில் கஞ்சாவுடன் பல நபர்கள் கைதாகியிருந்தாலும், வனப்பகுதியில் பாரியளவில் கஞ்சா செய்கை செய்யப்பட்ட தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாக கருதப்படுகின்றது.