பொத்துவிலில் ஆரம்பமான பேரெழுச்சிப் பேரணி பொலிகண்டியை அடைந்ததுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஊடாக இன்று மாலை பொலிகண்டியை அடைந்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்தும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக நீதியை வழங்குமாறும் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறும் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் உட்பட பெருந்திரளாவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பேரணி பொலிகண்டியை அடைந்ததும், அங்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மக்கள் எழுச்சி கூட்டம் நடத்தப்படுவதுடன், பேரணியின் நினைவாக அந்த இடத்தில் மரக் கன்றுகளை நடும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.