பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டோர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலுக்குச் சென்ற பேரணி, முள்ளிவாய்க்கால் மண்ணில் எடுக்கப்பட்ட கைப்பிடி மண்ணை, பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பயன்படுத்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் வடமராட்சி நோக்கி பேரணி தொடர்கின்றது.
வடக்கு, கிழக்கு சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
இதில் பெருந்திரளான இளைஞர்களும், சிவில் அமைப்புகளை சேர்ந்தோரும் இணைந்துகொண்டுள்ளனர்.