இலங்கையின் மேல் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1406 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 681 பேரும், குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த 44 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.