கஸகஸ்தான் நாட்டிலிருந்து 164 சுற்றுலாப் பயணிகளை உள்ளடக்கிய குழுவொன்று இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
எயார் அஸ்டானா விமானத்தில் இவர்கள் மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை கஸகஸ்தானில் இருந்து ஒவ்வொரு சனி மற்றும் வியாழக்கிழமைகளில் விமான சேவைகள் இயங்கவுள்ளதாக மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மத்தள சர்வதேச விமான நிலையத்தை கடந்த அரசாங்கம் நெல் களஞ்சியப்படுத்தப் பயன்படுத்தியதாகவும், இன்று அங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் 5 விமான சேவை நிறுவனங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.