இலங்கையின் விமான நிலையங்கள் 10 மாதங்களின் பின்னர் இன்று சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளன.
உலகலாவிய கொரோனா தொற்று பரவல் அவதானத்தைத் தொடர்ந்து இலங்கையின் விமான நிலையங்கள் கடந்த 2020 மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியன சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் வியாபார ஏற்றுமதி நடவடிக்கைகளுக்காகவும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வருகைக்காகவும் விமான நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து வகையான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி, சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள், ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.ஷானக தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தடுப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளால் நாட்டினுள் கொரோனா பரவாமல் இருக்க அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.