May 29, 2025 3:50:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி அரசாங்கத்திற்கு சார்பானதே என்கின்றார் டக்ளஸ்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானது, இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் c தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த போராட்டம் சுயலாப அரசியலோடு சம்பந்தப்பட்டதே தவிர அதில் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்றார்.

ஒரு வகையில் இந்த போராட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்குத் தென்னிலங்கையில் வலு சேர்க்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கத்தில் எங்களால் போராட்டங்களையும் முன்னெடுக்க முடியும் என்பதைச் சர்வதேச சமூகத்திற்கு காட்டுகின்றார்கள் எனவும் கூறினார்.

மறு பக்கம் மக்களிடம் வாக்குகளை அபகரிப்பதற்கு இதனைப் பயன்படுத்துகின்றார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது அவர்களால் எங்களுடைய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை எனவும் தெரிவித்தார்.