January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி: வாகனங்களுக்கு சேதம் விளைவித்த விஷமிகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில் சில விஷமிகளால் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டதால், பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது நாளாக தொடரும் தமிழர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப்போராட்டம் தற்போது திருகோணமலை நகரிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்கிறது.

இதன்போது பேரணியில் வாகனங்களை சேதப்படுத்தும் நோக்குடன் புல்மோட்டை பாலத்திற்கு அருகில் சில வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதையில் ஆணிகளை வைத்து சிலர் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பேரணியில் கலந்துகொண்டிருந்த மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் இதன்காரணமாக பேரணி சற்று தாமதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மீது திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள இளைஞர்களினால் பரவலான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்துடன், இவ்வாறான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் திட்டமிட்டவாறு பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.