பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது.
3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமான பேரணி 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சென்றடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை போராட்டங்களை நடத்த நீதிமன்றங்களினால் தடையுத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 ஆம் திகதி வரையில் பேரணியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொத்துவிலில் ஆரம்பமான பேரணி மூன்றாம் நாளான இன்று திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நடத்தப்பட்டு வருகின்றது.