January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இன ஒற்றுமையை வேண்டி மன்னாரில் இருந்து கொழும்புக்கு பாத யாத்திரை

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் காலை மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து கொழும்பிற்கான பாத யாத்திரையை மன்னாரைச் சேர்ந்த ‘சாக்கு சாமியார்’ என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் கிருஸ்ணன் டயஸ் ஆரம்பித்துள்ளார்.

நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, சாந்தி சமாதானம் நிலவவும் குறிப்பாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக தங்களை அர்பணித்து வரும் சுகாதார தரப்பினர், உற்பட அனைவருக்கும் உடல் உள நலம் வேண்டியும், பாதயாத்திரை மேற்கொள்வதாக கிறிஸ்தோப்பர் கிருஸ்ணன் டயஸ் தெரிவித்தார்.

குறித்த பாதயாத்திரையானது சுமார் 40 நாட்கள் இடம் பெறும் எனவும் நாள் ஒன்றிற்கு 10 கிலோ மீற்றர் தூரம் வரை யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் செல்லும் வழிகளில் உள்ள முக்கிய வழிபாட்டிடங்களை தரிசிக்க உள்ளதுடன் கொழும்பிலுள்ள ஒரு முக்கிய பௌத்த மதத் தளத்தை அடைந்து தனது பாதயாத்திரையை நிறைவு செய்ய இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டு சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மன்னாரிலிருந்து 41 நாட்கள் நிலத்திற்கு சாக்கு விரித்து அனுராதபுரம் வரை உருண்டு சென்றதுடன் 2020 ஆம் ஆண்டின்போது 50 நாட்கள் பேசாமலும் உண்ணாமலும் ஒரு தினத்தில் சிறிதளவு பசும் பால் மட்டும் அருந்தி தவம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் காலை மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து கொழும்பிற்கான பாத யாத்திரையை மன்னாரைச் சேர்ந்த ‘சாக்கு சாமியார்’ என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் கிருஸ்ணன் டயஸ் ஆரம்பித்துள்ளார்.

இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு எம் நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் நிலவவும் குறிப்பாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காகத் தொடர்ச்சியாக தங்களை அர்ப்பணித்து வரும் சுகாதார தரப்பினர், உற்பட அனைவரும் உடல் உள நலம் வேண்டியும், பாதயாத்திரையை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

குறித்த பாத யாத்திரையானது சுமார் 40 நாட்கள் இடம் பெறும் எனவும் நாள் ஒன்றிற்கு சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் வரை பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் செல்லும் வழிகளில் உள்ள முக்கிய மதஸ்தலங்களை தரிசிக்க இருப்பதுடன் கொழும்பிலுள்ள ஒரு முக்கிய பௌத்த மதத் தளத்தை அடைந்து தனது பாதயாத்திரையை நிறைவு செய்ய இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னாரிலிருந்து 41 நாட்கள் நிலத்திற்கு சாக்கு விரித்து அனுராதபுரம் வரை உருண்டு சென்றதுடன் 2020 ஆம் ஆண்டின்போது 50 நாட்கள் பேசாமலும் உண்ணாமலும் ஒரு தினத்தில் சிறிதளவு பசும் பால் அருந்தி தவம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.