May 29, 2025 14:39:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்டுநாயக்க தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டது

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கழிவு மீள்சுழற்சி செய்யும் தொழிற்சாலையொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் படை, நீர்கொழும்பு நகர சபை மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து தீப் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

கழிவு மீள்சுழற்சி தொழிற்சாலையின் குப்பைகளை எரிக்கும் இடத்தில் இருந்தே தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

8 தீயணைப்புப் படை வாகனங்களின் உதவியுடன் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.