January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நீதிமன்றக் கட்டளைகளால் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது”

நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் நிறுத்தமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஆரம்பிக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மீண்டும் மக்கள், இளைஞர்களுக்கு சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தங்கள் உரிமை தொடர்பான விடயங்களுக்காகப் போராட்டம் நடத்தும் போது மாத்திரம் கொரோனாவும், நீதிமன்ற உத்தரவுகளும் வருகின்றன.

இது தான் இந்த நாட்டின் தலைவரின் ஒரே நாடு ஒரே சட்டம். அரசின் இவ்வாறான பாரபட்சம் காட்டும் அடக்குமுறைக்கு எதிராகவே இன்று இந்தப் போராட்டம் பொத்துவிலில் ஆரம்பிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எமது மக்களுக்காக எந்தத் தடையையும் உடைக்கத் தயாராகவுள்ளோம். எனவே இதற்கு எமது மக்கள், குறிப்பாக இளைஞர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும். இது எமது உரிமைக்கான போராட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.