May 25, 2025 2:17:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் ஒளவையார் நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு

வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு நிகழ்வு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஒளவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆசிரியர் உதயகுமார் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், ரி.கே.ராஜலிங்கம்,  நகரசபை உறுப்பினர்களான சு.காண்டீபன், நா,சேனாதிராஜா, சமூக ஆர்வலர்களான சந்திரகுமார் கண்ணன், மாதவன், விக்னா, நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.