January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் கந்தன் ஆலயத்தின் நெற்கதிர் அறுவடைத் திருவிழா

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் நெற்கதிர் அறுவடைத் திருவிழா இன்று காலை இடம்பெற்றது.

ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலில் இந்த விழா நடத்தப்பட்டது.

அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன.

 

ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் தினத்திற்கு முதல் நாள் நடத்தப்படும் இவ்விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும் ஆலயத்திற்குச் சொந்தமான வயலில் முதலாவது கதிரை அறுவடை செய்வர்.

இந்த விழா 287 ஆவது வருடமாக இம்முறை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.