
கிளிநொச்சி மகா வித்தியாலயம், கிளிநொச்சி ஆரம்ப வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடங்களை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் திறந்துவைத்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வடக்கு மாகாண ஆளுநர் கிளிநொச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் 2019 ஆம் ஆண்டின் மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இருமாடி வகுப்பறைத் தொகுதியைத் திறந்துவைத்துள்ளார்.
அத்துடன், தேசிய நல்லிணக்கத்துக்கும் ஒருமைப்பாட்டுக்குமான அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட உயர்தர மாணவர்களுக்கு உரிய விஞ்ஞான செயன்முறை ஆய்வுகூடத்தினையும் இதன்போது திறந்துவைத்துள்ளார்.
நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.