May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிளிநொச்சி சந்தைக்குள்ள போறாடா’ இறுவெட்டு வெளியீடு

‘கிளிநொச்சி சந்தைக்குள்ள போறாடா’ என்ற இறுவெட்டு கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. பிரசாத்தின் தாளலயா கலையகத்தின் வெளியீட்டில் வினோத்தின் வரிகளில் இந்த இறுவெட்டு வெளிவந்துள்ளது.

இறுவெட்டில் பணியாற்றிய கலைஞர்கள் வெளியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இறுவெட்டை பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சிவமோகன், கிராம சேவையாளர், கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.