November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 100 க்கு அதிகமான மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா இரண்டாவது அலையில் 100 க்கு மேற்பட்ட மருத்துவர்கள் கொவிட்- 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 40 க்கு அதிகமான மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் விநியோகத்தை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்றும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்களப் சுகாதாரப் பணியாளர்களில் தாதியரும், பொது சுகாதார மருத்துவ அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பூசிகள் வழங்கப்படும் போதே, அவர்களால் ஏனையோரைப் பராமரிக்க முடியும் என்பதையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.