கிளிநொச்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 77.3 கிலோ எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய, பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார லியககேவின் உத்தரவிற்கு அமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்த பிரதேசத்தில் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வெளி இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக குழுவொன்றினால் அந்த பிரதேசத்திற்கு எடுத்துவரப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேக நபர்கள் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகள் இரண்டும், படகு ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இதன்போது சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்யவதற்காக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.