2020 டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள பரீட்சார்த்த சுற்றுலாத்துறை வேலைத்திட்டத்தில் 420 மில்லியன் ரூபா வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி விமான நிலையத்தை திறப்பதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் வருவதால் மீண்டும் இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப முடியுமாக இருக்குமெனவும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறைக்கான நாடு திறக்கப்படும் வேளையில் நாளாந்தம் மூவாயிரம் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவதாகவும், சுற்றுலாப்பயணிகள் எந்தவித சிரமங்களையும் எதிர்கொள்ளாத விதத்திலான வேலைத்திட்டங்களை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடக நிறுவன பிரதானிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 28 ஆம் திகதிக்கு பின்னர் யுக்ரைனில் இருந்து இதுவரையில் 1500 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.