கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் இயங்கு நிலையில் இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி, 5 பேர் கொண்ட புதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமைக்கு எதிரான ஆரம்பிக்கப்பட்ட உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் மேற்கொண்ட நியமனத்துக்கு எதிராக சங்க அங்கத்தவர்கள் முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்பில் தீர்வு கிடைக்காத நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குநர் சபையை இரத்துச் செய்யக் கோரி, உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இயங்கு நிலையில் உள்ள நிர்வாகத்தை செயற்பட அனுமதிக்குமாறும், கிளைக்குழு தேர்தலை நடத்தி புதிய நிர்வாகத்தை தெரிவுசெய்ய வேண்டும் என்றும் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு உணவுத் தவிர்பில் ஈடுபட்டுள்ள இருவரையும் பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டிருந்தாலும், தீர்வுகள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.