January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரணைமடு குளத்தின் நீர்பாசன நடவடிக்கைகளுக்கு 101 வருடங்கள்: கிளிநொச்சியில் பொங்கல் விழா

இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசன நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வருடாந்த பொங்கல் விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பொங்கல் நிகழ்வு இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள மிகப்பெரிய குளமான இரணைமடு குளத்திலிருந்து விவசாயச் செய்கைக்காக நீர்ப்பாசன நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன் 101 ஆண்டுகள் கடந்துள்ளது.

நிகழ்வின் பிரதான பொங்கல் வைக்கப்பட்டதை தொடர்ந்து இரணைமடு விவசாய சம்மேளனத்தில் அங்கத்தவர்களாக உள்ள விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாய குடும்பங்கள் பொங்கலிட்டதும் குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.