January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது சிவில் விமான போக்குவரத்து ஆணையம்

இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் (இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள்) இலங்கைக்குள் நுழைவதற்கு வெளியுறவு அமைச்சகம் அல்லது அந்தந்த நாட்டின் இலங்கை தூதுவராலயங்களிலிருந்து முன் ஒப்புதல் பெற வேண்டும் என்று இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இத்தகைய ஒப்புதல்கள் இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு  நேரடியாக அனுப்பப்படும் என்றும்  அங்கு அங்கீகரிக்கப்படும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குமாறு அந்த ஆணையம் அந்தந்த விமான நிறுவனத்திற்கு அறிவுறுத்தும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பயணிகளின் ஒப்புதல்களுக்கான பிரத்யேக மின்னஞ்சல் முகவரியான caaslpax@caa.lk ஐ இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அமைத்துள்ளது. அனைத்து ஒப்புதல்களும் இந்த மின்னஞ்சல் முகவரி மூலம் கையாளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.