இலங்கையின் வெளிநாட்டுப் பணியாளர்கள் தமது முறைப்பாடுகளை இணையவழியில் மேற்கொள்வதற்கான வசதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போதைய கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலமைகள் காரணமாக முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக பதிவு செய்வதற்கே இந்தப் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக வெளிநாட்டுப் பணியாளர்கள் தமது முறைப்பாடுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அறிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையின் வெளிநாட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை குறித்த இணையத்தளம் மூலம் பதிவுசெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.