கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக கண்டியில் தற்காலிகமான மூடப்பட்ட 42 பாடசாலைகள், எதிர்வரும் 14 ஆம் திகதி மீளத் திறக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
எனினும், கண்டியில் மூடப்பட்ட 45 பாடசாலைகளில் மூன்று பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே கூறியுள்ளார்.
கண்டி மாநகர அதிகார சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் இருக்கும் பாடசாலைகள், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக அண்மையில் மூடப்பட்டன.
இந்த நிலையில், மஹிய்யாவ பிரதேசம் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளமையால் அங்கிருக்கும் பாடசாலைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.